சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்பட சில கட்சிகள் இணைந்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

லோக்சபா தேர்தலில்  தமிழ்நாடு புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி போட்டியிடுகிறது.    அதிமுக கூட்டணியில் பாமக இணையும் எதிர்பார்த்த நிலையில், கடைசி நேரத்தில் பாமக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. இதையடுத்து, தேமுதிகவை மடக்கிய அதிமுக தலைவர்கள் கூட்டணியை இறுதி செய்துள்ளனர்.

அதன்படி, அதிமுக கூட்டணியில்,  தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்பட மேலும் பல லேட்டர் பேடு கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

அதன்படி,  தேமுதிகவுக்கு – 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.  மருத்துவர் கிருஷ்ணசாமியின்  புதிய தமிழகம் கட்சிக்கு – 1 இடமும் , எஸ்.டி.பி.ஐ  கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.  அதாவது கூட்டணி கட்சிகளுக்கு  8 இடங்கள் மட்டுமே  ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 32 இடங்களில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.