சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட  வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர்   எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ளார்.

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில்,  தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்பட பல சிறுகட்சிகள் இணைந்துள்ளன. தமிழ்நாடு புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளில்,  8 இடங்கள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது. மீதமுள்ள 32 இடங்களில் அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.அதன் விவரம் வருமாறு:

  1. சென்னை வடக்கும: இராயபுரம் மனோகர் (முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி) 
  2. சென்னை தெற்கு: டாக்டர் ஜெ.ஜெயவர்தன்
  3. காஞ்சிபுரம்: ராஜசேகர்
  4. அரக்கோணம்: ஏ.என் விஜயன்
  5. கிருஷ்ணகிரி: ஜெயபிரகாஷ்
  6. ஆரணி: கஜேந்திரன்
  7. விழுப்புரம்: பாக்கியராஜ்
  8. சேலம்: விக்னேஷ்
  9. நாமக்கல்: தமிழ்மணி
  10. ஈரோடு: ஆற்றல்
    அசோக் குமார்
  11. கரூர்: தங்கவேல்
  12. சிதம்பரம்: சந்திரஹாசன்
  13. நாகை: சுர்ஜித் சங்கர்
  14. மதுரை: டாக்டர் சரவணன்
  15. தேனி: நாராயணசாமி
  16. ராமநாதபுரம்: ஜெயபெருமாள்