உள்ளாட்சி தேர்தல்: 3 நாட்களில் 42,907 பேர் வேட்பு மனு தாக்கல்!

Must read

சென்னை:
ள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 3 நாட்களில் 42907 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 26-ம் தேதி தொடங்கியது.
tbevb
முதல் நாளில் 4,748 பேரும்,
இரண்டாவது நாளில் 6433 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மூன்றாவது நாளான நேற்று 31726 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 82 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 334 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 3930 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 26641 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு 112 பேரும், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 136 பேரும், டவுன் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 491 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.வேட்பு மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 42907 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

More articles

Latest article