பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா?

Must read

சென்னை:
ன்று சென்னையில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, சிக்கியவர் பயங்கரவாதியா, அப்பாவியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிக்கிய இளைஞர்
சிக்கிய இளைஞர்

கோவை இந்துமுண்ணனி நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று பா.ஜ.க.வினர் சென்னை எழும்பூரில்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்த காவல்துறையினர் வேப்பேரி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
அடைக்கப்பட்ட பா.ஜ.கவினர் திடீரென மண்டபத்தில் இருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, “இஸ்லாமிய பயங்கரவாதிகள் மூவர் வந்தனர்” என்று பா.ஜ.க. தரப்பினர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவினரின் பதிவுகளில் ஒன்று..
பாஜகவினரின் பதிவுகளில் ஒன்று..

பா.ஜ.க.வினர், “எங்கள் கட்சி தலைவர்களும்  பரிவார் தலைவர்களும் சிறை வைக்கப்பட்ட இடத்தில்  நான்கு முஸ்லீம் பயங்கரவாதிகள் ஊடுருவினர்.  அவர்களில் மூவர் தப்பித்து ஓட, மிச்சம் உள்ள ஒருவரைக் காவல்துறை பிடித்து பாதுகாப்பில் வைத்துள்ளது. அவர் பெயர் முகமது மீரான்” என்று தெரிவிக்கிறார்கள்.  இதே கருத்தை சமூகவலைதளங்களிலும் எழுதி வருகிறார்கள்.
அதே நேரம் வேறு ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது.
“பாஜகவினர் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வழியே வந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே  வந்த ஒருவரை அக் கட்சியினர் மிரட்டினர்.  இதனால் மிரண்டுபோன அந்த நபர் பயந்து ஓடினார். அவரை பாஜகவினர் துரத்தினர்.
இதையடுத்து காவல்துறையினர் பாஜகவினரை தடுத்தனர். இதையடுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே பாஜகவினரை காவல்துறையின் தாக்குவதாகக் கூறி, அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தங்களது கூட்டத்தினுள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஊடுருவல் என்றும் சொல்ல ஆரம்பித்தனர் பாஜகவினர்” என்று சொல்லப்படுகிறது.
சிக்கிய நபர், பயங்கரவாதியா அப்பாவியா என்பது குறித்து காவல்துறை இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.

More articles

Latest article