சென்னை

மிழக தேர்தல் ஆணையம் இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டுகிறது.

கடந்த ஆட்சியில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.  அவ்வாறு பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தவில்லை.  இதையொட்டி  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை இந்த மாதத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது..

இந்த உத்தரவின்படி நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.    இன்று காலைஅங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்

இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் மற்றும் வட்டம் வரையறை குறித்தும் மற்ற ஏற்பாடுகள் தொடர்பாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்க உள்ளனர். அத்துடன், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தங்களது கோரிக்கைகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.