சென்னை:

ந்த கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள  ஆசிரியர்கள் உடனே பணிக்கு சேர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை  அரசு பள்ளிகளிலும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், தனியார் பள்ளிகள் போல எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் தொடங்கி வருகிறது. ஏற்கனவே சென்னை போன்ற நகர்ப்பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும்  அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி தொடங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பேரில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று தொடக்கக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்க நடவடிக்கை எடுக்க   வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகள் வளாகங்களில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதில்   எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பாடம் நடத்த தலா ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தொடக்கப் பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் உடனே பணிக்கு சேர்ந்த  எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை உடனடியாக செய்ய வேண்டும். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளில் பணியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

classes in: order to the Teachers join the duty immediately