தஞ்சை:

சிறையில் சசிகலாவின் உணவில் பல்லி வால் கிடப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (மார்ச் 30) தஞ்சையில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. பழ. நெடுமாறன் நிகழ்வுக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு படத்தைத் திறந்து வைத்தார். நடராஜன் நினைவு மலரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட திவாகரன் பெற்றுக் கொண்டார்.

திருமாவளவன், சீமான்,தா.பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன், சிறையில் சிறையில் சசிகலாவின் சசிலாவின் உணவில் பல்லி வால் கிடப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

“சிறையில் நடக்கும் கொடுமைகள் பற்றி சின்னம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். சிறையில் குடிக்க தண்ணீர் கொண்டு வைப்பார்களாம். அதில் சிலர் சோப்பைக் கரைப்பார்களாம். சாப்பாடு கொண்டு வைப்பார்களாம், அதில் பல்லி வால் கிடக்குமாம். இத்தனை கொடுமைகளை அனுபவிக்கிறார் சசிகலா.  இப்படிப்பட்ட தியாகத் தலைவி சசிகலாவின் கணவர் பெரியவர் நடராஜன் அவர்களின் இழப்பு மிகவும் துயரமானது.

தியாகக் குடும்பம் என்பது சசிகலா குடும்பம்தான். இந்தக் குடும்பத்தால்தான் அரசியலில் பல பேர் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் செய்த தவறே பலரை முன்னேற்றிவிட்டதுதான். இன்று நல்லவர்கள் அனைவரும் தியாகத் தலைவி சசிகலா பக்கம் வந்திருக்கிறார்கள். தமிழகம் எங்கள் பக்கம்தான் என்பதை விரைவில் நிரூபிப்போம்” என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.