100 வயது கடந்தும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? : 120 வயது முதியவர் சொல்லும் ரகசியம்

Must read

கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கொத்தாவை சேர்ந்த சிவானந்தா. என்பவருக்கு  120 வயது ஆகிறது. இப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார். தனக்கான வேலைகளை தானே செய்துகொள்கிறார்.
இவரது ஆரோக்கியமான செயல்பாட்டைப் பார்த்து வியந்து, “எப்படி இத்தனை வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறீர்கள்” என்று கேட்டால்  “நூறு வயது வாழ்வதற்கான ரகசியம்… “ என்று சொல்லி சிரித்துவிட்டுச் சொல்கிறார்:
“உணவுப் பொருட்களில் மசாலா சேர்ப்பதில்லை. உடற்பயிற்சி கட்டாயம்.. அதுவும் யோகா தினமும் செய்கிறேன். மூன்றாவத விசயம் மிக முக்கியமானது.. செக்ஸ், கூடவே கூடாது. அதனால்தான் அந்தக் காலத்தல் முனிவர்களும் ஞானிகளும் பல நூறாண்டுகள் வாழ்ந்தார்கள்!” என்கிறார்.
 
 

More articles

Latest article