சென்னை

பொங்கலை முன்னிட்டு எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்னும் பட்டியல் வெளியாகி உள்ளது. 

தற்போது திரையரங்குகளை விட  ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களைக் காண்பதில் மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்  வீட்டில் அமர்ந்தபடியே திரைப்படங்களைக் காணப் பலரும் விரும்புவதால் இந்த் மாறுதல் ஏற்பட்டுள்ளது.  

பொங்கலை முன்னிட்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரங்கள் வருமாறு : 

நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் இயக்கியுள்ள சேரன்ஸ் ஜர்னி என்ற வெப்  தொடர் ஜனவரி 12 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.  இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்ய பாரதி உள்ளிட்டோர் பிரதான வேடத்தில் நடித்துள்ளார்கள்.  

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் அறிமுக இயக்கநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ‘ஜோ’ ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகிறது. 

பலர்து எதிர்பார்ப்பில் உள்ள சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த மே 5 ஆம் தேதி வெளியான நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் ஜன. 12 ஆம் தேதி வெளியாகிறது. 

இன்று பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி, ரிஷிகாந்த், ராஜாமணி உள்ளிட்டோர் நடித்த சிவப்பி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்திலும், டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபுள் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியானது.