மேஷம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

மந்த நிலையில் இருந்துவந்த தொழிலில்கூட, நல்ல மாறுதல்களைக் காணலாம், உற்பத்தியை அதிகரிப்பதற்கு சந்தை நிலவரம் இடம்கொடுக்கும். உங்கள் உத்வேகம் அரசாங்க ஆதரவை உறுதி செய்யுது. புது வேலை தேடுவதற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். பொருளாதாரத்துல நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன்பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அம்மாவுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். அம்மா வழி உறவினர்களைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தும்படியான விசேஷங்கள் நிகழும். அவங்க அரசாங்க உத்யோகத்தில் இருக்கறவங்க என்றால் அவங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். பல விதமான கல்விகளில் உங்களை ஈடுபடுத்திப்பீங்க.

ரிஷபம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

முதலீடு செய்ய உகந்த காலம் இது. எந்த முயற்சியும் லாபகரமாக இருக்கும். எனினும் மெதுவான முன்னேற்றத்தைத்தான் காண முடியும் என்பதை மனசுல வைத்துச் செயல்படுங்கள். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கைகூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. நடுவுல கடுகு சைஸ் கஷ்டங்கள் வந்துட்டுப் போனபோது மனசளவுல டவுன் ஆயிட்டீங்க. ஒய்? அதெல்லாம் கடந்து செல்லும் மேகம் மாதிரிங்க. கணவருக்கு அல்லது மனைவிக்கு ஒரு குட் நியூஸ் உண்டு. அவசரப்பட்டு எதையுமே பேசிடாதீங்க. கவனமா இருங்க. பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். அரசியல்வாதிகள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீங்க. இந்த வாரம் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை ஏற்படும்.

மிதுனம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

இசைக்கலைஞர்கள்.. நாட்டிய விற்பன்னர்கள், ஓவியம் வரையும் திறமையாளர்கள், நாதஸ்வர வித்வான்கள். ஓதுவா மூர்த்திகள், மிருதங்க வித்வான்கள், நாடகக் கலைஞர்கள், திரைப்படத் துறையினர் ஆகிய அனைவருக்கும் லாபகரமான வாரம் இது. உத்யோகம் ஒரு பக்கம் கலை வாழ்க்கை மறு பக்கம் என்று ஜமாய்ப்பீங்க. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.  உத்தியோகத்துல இருக்கறவங்க வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 11 முதல் ஜனவரி 14 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கடகம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

கலைத் துறையினர் லேசான ஏற்றம் காண்பீங்க. வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகிய கலைகளைப் போதிக்கும் பள்ளிகளுக்கு வருமானம் கூடும். இதுவரை தொடர்ந்து ஏற்பட்டுவந்த பின்னடைவு நீங்கும். பட் ஒன் திங்.. உங்க ஹெல்த்தைக் கெடுக்கக்கூடிய எந்தச் செயலிலும் ஈடுபடாதீங்க. பழக்க வழக்கங்கள் ஸ்ட்ரிக்டாய் கரெக்டா இருக்கட்டும். பண விவகாரங்களில் கவனம் தேவை. பெண்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 14 முதல் ஜனவரி 16 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

சிம்மம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

நீங்க பிசினஸ் செய்யறவராய் இருந்தால்.. உற்பத்திற்கு அவசியமான மூலப் பொருட்களின் விலை குறைவதால், உற்பத்தியை அளவோடு அதிகரித்துக் கொள்ளலாம் மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவும், கட்சித் தொண்டர்களின் உதவியும் மனத்திற்கு சந்தோஷம் குடுக்கும். அரசியல்வாதிகளுக்கு வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீங்க. எங்கும் எதிலும் நிதானமான முன்னேற்றம்தான் இருக்கும். சலிச்சுக்காதீங்க. முன்னேற்றம்  இருக்கு என்பதே குட் நியூஸ்தானே?

சந்திராஷ்டமம் : ஜனவரி 16 முதல் ஜனவரி 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கன்னி

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

பல விசேஷ நன்மைகள் காத்திருக்கு. லேடீஸ்க்கு, நல்ல வேலை கிடைக்கும். உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மூட்டுவலி, நடப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் போன்ற உபாதைகளினால் வருந்தும் முதியோருக்கு வலி குறைந்து, சோர்வும் நீங்கும். சிரமங்கள் மெல்ல மெல்லக் காணாமல் போய் நிம்மதி உங்களை அணைப்பதை அனுபவத்தில் காணலாம். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், நிரபராதியென வெளிவந்துவிடுவீங்க. அல்லது சொத்து சம்பந்தமான வழங்குங்க இருந்தால் உங்க பக்கம் ஜெயமாகும். இந்த வாரம் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாத்திடுவீங்க. மத்தவங்களோட பிரச்சனைகளுக்கு வலியப்போய் உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விரும்பிய ஊருக்கு அல்லது நாட்டிற்கு இடமாற்றம் உண்டாகலாம். இந்த வாரம் நற்பெயரும் புகழும் உண்டாகும்.

துலாம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

பெரும்பாலான கிரங்கள் பல விசேஷ நன்மைகளை உங்களுக்கு அளித்தருளவுள்ளார்கள்! உங்கள் ஆசைக் கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பாங்க. சில விஷயங்களில் லேசான விரக்தி மனப்பான்மை எழுந்தால் அதன்  தலையில் தட்டி உக்கார வைச்சுட்டு, பிறகு உற்சாகமாய் எழுந்து செயல்படுங்க. புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனசுல இருந்த வன்மம், பகை மற்றும் கெடுதலான எண்ணங்கள் காணாமல் போய் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்.

விருச்சிகம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

சிறு விஷயங்களுக்கும்கூட, அதிகமாக பாடுபடவேண்டியதிருக்கும். விவாக முயற்சிகளில், சிறு தடங்கல் ஏற்பட்டு, அதன் பிறகு நல்ல வரன் அமையும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சொந்த வீடு அமையும் யோகமும் அமைந்துள்ளது. வெளியூர்ப் பயணம் ஒன்று தவிர்க்க இயலாதது. பிரசித்தி பெற்ற திருத்தல தரிசனம் ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு முன்னேற சான்ஸ்கள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீங்க. குடும்பத்துல நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்துல ஈடுபட்டிருக்கறவங்க வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. கரெக்டான முடிவுதாங்க. பயம் வேணாம்.

தனுசு

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

உடன்பிறந்தோர் நன்மை பெறுவாங்க. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு, சுகப் பிரசவம் உண்டாகும். கூடியவரையில் வீண் அலைச்சலையும், உடல் உழைப்பையும் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யவும். வெளியூர்ப்பயணம்.. தவிர்க்கவே முடியாமல் ஏற்பட்டுவிட்டால், பயணத்தின்போது எல்லாப் பொருட்களையும் கேர்ஃபுல்லா எடுத்து, பத்திரமாய் வைச்சுக்குங்க. மனவருத்தத்துடன் சென்ற ரிலேடிவ்ஸ் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவாங்க. பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. பெண்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

மகரம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ள முயற்சியுங்க. பிகாஸ் உங்களோட பயங்களில் பாதி கற்பனை பயங்கள்தான். மீதி இப்போதைக்குக் கவலைப்பட வேண்டாத விஷயங்கள். மாணவ – மாணவியருக்குக் கல்வி முன்னேற்றம் எவ்வித பாதிப்புமின்றி நீடிக்கிறது. அடிக்கடி உடல்நலன் பாதிக்கப்படக்கூடும்.டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி நிம்மதியடைவீங்க. நீங்க கவனமாய் இருக்க வேண்டியதெல்லாம் பேச்சில்.. வார்த்தைகளில்… பிராமிஸ் செய்வதில்.. சாபம் விடுவதில்தான். எளிமையாச் சொல்லணும்னா.. பேச்சில் கவனமா இருங்க. நல்லவங்க யாரோடயாவது நட்பு பிசகியிருந்தால் சரி செய்யப்பாருங்க. கணவன் மனைவிக்குள் ஆறுதலான நட்பு நிலவும். அவங்களை நீங்களும் உங்களை அவங்களும் புரிஞ்சுப்பாங்க. நண்பர்களுக்கிடைல சின்ன ஊடல் வந்தாலும் உடனே சமாதானமாயிடும். கொழந்தைங்களோட அன்புல கரைஞ்சு போவீங்க.

கும்பம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

உழைப்பிற்கேற்ற லாபம் சற்றே தாமதமாகக் கிடைக்கும். விளைச்சல் திருப்தி தரும். இடைத்தரகர்களினால், சந்தை நிலவரம் சற்றே மாறும். இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் பராமரிப்பில் எதிர்பார்ப்பை விட, சற்று அதிகமாக பணம் செலவழியும். டோன்ட் ஒர்ரி.  கடன் வாங்க வேண்டிய அவசியம்லாம் இருக்காது. மனோதிடம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி சான்ஸ் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகளுக்காக சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி நீங்கும். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீங்க. பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் பாக்கறவங்க வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவாங்க.

மீனம்

இனிய பொங்கல் வாழ்த்துகள்.

பழைய கடன்கள் ஏதாச்சும் இருந்தால், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள இறைவன் அளிக்கும் அரிய வாய்ப்பு இது. விடாது முயற்சிகள் செய்ங்க. கண்டிப்பாப் பலன் இருக்கும்.  திருமண முயற்சிகளில், சிறு பிரச்னைகளும், குழப்பமும் ஏற்பட்டால் டென்ஷன் எதுவும் வேணாங்க. அதற்குப் பின் நல்ல வரன் அமையும். குடும்பத்துல சுபச் செலவுகள், எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே இருக்கும். ஆனாலும் அதன் மூலம் நன்மையும் சந்தோஷமும் கெடைக்கும். அதெல்லாம் மூலதனமாகவே அமையும். நீங்க ஸ்டூடன்ட்டா? எனில் கூடுதல் மதிப்பெண் பெற சற்று அதிகக் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். படிப்பீங்க. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் திறமை அதிகரிக்கும். பகைவர்களால ஏற்படும் சிறு தொல்லைங்களை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கொஞ்சம் அதிக கேர்ஃபுல்லா இருக்க வேண்டும். ரகசியங்களை ஷேர் பண்ணிக்காதீங்க.