சென்னை:
து விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில், டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்த திட்டமில்லை என்றும், தற்போது 500 மது கடைகள் குறைக்கப்பட்டன என்றும் கூறினார்.

மது அருந்துபவர்கள் தவறான இடத்திற்கு செல்லக் கூடாது என்பதற்காக விற்பனை இலக்கு கண்காணிக்கப்படுவதாகவும், கூடுதல் விலைக்கு மது என புகார் வந்தால் உடனுக்குடன் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.