திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஐம்பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழுகம் திருவண்ணாமலையில் உள்ள, அண்ணாமலையார் மலையை சிவனாக வணங்கி, பக்தர்கள் வழிபடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையை சுற்றி கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்த மாத பவுர்ணமி 28 மற்றும் 29ந்தேதி வருகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கானோர் திருவண்ணமலையில் கிரிவலம் செல்ல தயாராகி வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2020 மார்ச் முதல் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை உள்ள நிலையில், வரும்  28, 29 ஆகிய தேதிகளிலும் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.