பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Must read

சென்னை:
ள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார் திருநகரி தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி,அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த நோட்டீஸில் கண்ட ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆழ்வார் திருநகரில் பள்ளி வேன் மோதி இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பலியான விவகாரத்தில் தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேஷன் முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்த நோட்டீசில் கண்ட ஆறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அந்த நோட்டீஸில் கேள்விகளுக்கு பதில் அளிக்க தனியார் பள்ளி நிறுவனம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பள்ளி வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article