சென்னை
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ததற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவிட்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. திட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். நேற்றி டங்ஸ்டன் சுரங்க திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதற்கு பல்வேறு அரசியல் தல்வர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
”மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் மத்திய அரசு பணிந்துள்ளது! இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் துணைபோகக் கூடாது!”
என்று தெரிவித்துள்ளார்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
“மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். “
என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ,
“அரிட்டாபட்டி சுரங்க ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை அரிட்டாபட்டி பகுதி மக்கள் இன்று நிம்மதியாக தூங்குவர். டங்ஸ்டன் சுரங்கம் தேவையென்றாலும் விவசாய பகுதி,பல்லுயிர் பெருக்கத்தை கருத்தில் கொண்டு சுரங்க ஏல ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாமக தலைவர் அன்புமணி கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வரவேற்பை தெரிவிதுதுள்ளனர்.