சென்னை: கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 887 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று 4 லட்சத்து 13 ஆயிரத்து 718 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தனர். இன்றைய நிலவரப்படி, 4 லட்சத்து 4 ஆயிரத்து 958 பேர் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொற்று பாதிப்பில் 50 சதவிகிதம் கேரளாவிலேயே உள்ளது. இதனால், கொரோனா 2வது அலை முடிவுக்கு வந்து 3வது அலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால். இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை இன்னும் முடிவடையவில்லை. தற்போதும்,  4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர் என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கேரளாவில் மட்டும்தான் கொரோனாவுக்கு அதிக நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவின் 44 மாவட்டங்கள் வாராந்திர நேர்மறை விகிதத்தை 10% -க்கு மேல் தெரிவிக்கின்றன. அதிகமான நபர்கள் சிகிச்சை பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 5ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடனும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.