துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 முதல் 17 வயது குழந்தைகளுக்கு சீன தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசி போட ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

உருமாறிய நிலையில், கொரோனா தொற்று பரவி வருவதால், அதை தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. இதுவரை, பெரும்பாலான  18வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வரும்  நிலையில், சில நாடுகளில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது 12வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது 3வயது குழந்தைகள் முதல் 17வயது டீனேஜ் நபர்கள் வரை சீன தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா 3வது அலை குழந்தைகளுக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் எழுந்துள்ளதால், அதை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகத்தில் 3 வயது நிறைவடைந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆயில் நல்ல முடிவு கிடைத்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றம் அதிகரித்து இருப்பதாகவும் கூறும் சுகாதார அமைச்சகம், அவசர பயன்பாடு மற்றும் உள்நாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.