டில்லி:

க்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ந்தேதியான நாளை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தற்போது அங்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் நடைபெற்று  வருகிறது.

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.  அதன்படி  ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலையொட்டி தேசிய கட்சி தலைவர்களான  பிரதமர் மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்.

தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் – மாநிலங்கள் வாரியாக 

ஆந்திரா – 25 தொகுதிகள்,

அருணாச்சல பிரதேசம் – 2 தொகுதிகள்,

பீகார் 4 தொகுதிகள்,

அசாம் – 5 தொகுதிகள்,

சத்திஸ்கர் -1 தொகுதி,

ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள்,

மகாராஷ்டிரா 7 தொகுதிகள்,

மணிப்பூர் -1 தொகுதி,

மேகாலயா – 2 தொகுதி,

மிசோரம் – 1 தொகுதி,

நாகலாந்து – 1 தொகுதி,

ஒடிசா – 4 தொகுதிகள்,

சிக்கிம் – 1 தொகுதி,

தெலுங்கானா – 17 தொகுதிகள்,

திரிபுரா – 1 தொகுதி,

உ.பி. 8 தொகுதிகள்,

உத்தரகாண்ட் – 5 தொகுதிகள்,

மேற்கு வங்கம் – 2 தொகுதிகள்,

அந்தமான் – 1 தொகுதி,

லட்சத்தீவு – 1

(மொத்தம் 91 தொகுதிகள்)

தேர்தல் நடைபெற உள்ள 91 தொகுதிகளில் மொத்தம் 1280 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். தேர்தலை ஒட்டி துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.