பாட்னா: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள  பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவுக்கு வரும் 5-ந்தேதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட உள்ளதாக அவரத மகனும் பீகார் மாநில துணைமுதல்வருமனா  தேஜஸ்வி யாதவ் தெரிவித்து உள்ளார்.

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, சிங்கப்பூரில் வசிக்கும் அவரது மகள்  அவருக்கு ஒரு சிறுநீரகத்த தானமாக வழங்க முன்வந்துள்ளார்.

இதையடுத்து, லாலு சிங்கபூரில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்குள்ள பிரபல மருத்துவமனையில், வருகிற 5-ந்தேதி லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக,  அவரது மகனும், மாநில துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி தெரிவித்து உள்ளர்.

பீகார் மாநிலத்தில் உள்ள  குரானி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டபோது, இந்த தகவலை தேஜஸ்வி தெரிவித்தார்.

சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 74வயது லாலுவுக்கு மகள் ரோகிணி கிட்னி தானம்!