வனிதா-பவர் ஸ்டார் போட்டோ பார்த்து சிரித்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்…..!

Must read

நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார்.

பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.

இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டு வனிதா விஜயகுமார் மற்றும் நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை மென்ஷன் செய்து எபிக், ஒரிஜினல் கேரக்டர். அக்காவுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கிறது. குடும்பங்களை எப்படி மெயின்டெய்ன் செய்ய வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிரித்து கண்களில் நீர் வரும் எமோஜியை கமெண்ட் பாக்ஸில் போட்டார்.

இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற வனிதா, கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3-வது திருமணம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். அப்போது பீட்டர் பால் மனைவிக்கும் மகனுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் , கஸ்தூரி மற்றும் லிப்ரா ரவீந்திரன் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

More articles

Latest article