வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை வருகை தந்து, சாமி தரிசனம் செய்தனர்.

வைகாசி விசாக திருவிழாவையொட்டி, அறுபடைகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தரத் தொடங்கினர். இன்று காலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்ட நிலையில், லட்சக்கணக்கில் கோவிலில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், அண்டை மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-