4 தொகுதி இடைத்தேர்தல் எதிரொலி: தீவிரம் காட்டும் தேர்தல் பறக்கும் படையினர்

Must read

சேலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில், கார் ஒன்றில் ரூ. 49 லட்சத்தை எடுத்துக்கொண்டு ரவி என்பவர் பயணித்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த பறக்கும் படையினர், அவரது காரை நிறுத்தி சோதனையிட்டதில், அவரிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தனது தொழில் தேவைக்காக கடன் வாங்கியதாக ரவி தெரிவித்தாலும், உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அத்தொகையை திருப்பித்தர தேர்தல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

நாளை தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article