ஆவடி: சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் அருகே சீட்டு ஆடிய கூலித்தொழிலாளி, அங்கு வந்த  போலீசை கண்டதும், அவர்களிடம் இருந்து தப்பிக்க கூவத்தில் குதித்த நிலையில், அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி சேர்ந்தவர் சரவணன் (46). கூலித் தொழிலாளியான இவர், பட்டாபிராம் சுடுகாட்டில் 7 பேருடன் சேர்ந்து  சூதாட்டம் ஆடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்ததும், சீட்டு ஆடியவர்கள், அனைவரும் தெறித்து ஓடினர். அப்போது,  சரவணனும், அருகே உள்ள கூவத்தில் குதித்து தப்ப முயன்றால். ஆனால், அவர் ஆற்றில் உள்ள செடி கொடிகளில் சிக்கி அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் ஜெகன் அங்கிருந்து ஓடி வந்து கிராமத்தில் உள்ள உறவினர்கள், பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பொதுமக்கள் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுக்க, தீயணைப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படகு மூலம் ஆற்றில் இறங்கி சரவணனைத் தண்ணீரில் தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர். சுமார் 5மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு,  சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்ல, இறந்த ப முருகனின் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்துச் செல்ல முயன்றபோது, அவரது உடலை உறவினர்கள், வீட்டிற்குக் கொண்டு சென்றனர். இதனால், உறவினர்களுக்கும் காவல் துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சரவணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.