சென்னை:
திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சஸ்பென்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.