சென்னை:
செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழகத்தில் போக்குரவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம், தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அரசாணையில், ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.,1000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக பிடிப்பட்டால் ரூ.10,000 அபராதம், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1000, சிகப்பு, மஞ்சள் சிக்னல் இருக்கும்போது விதியை மீறி வாகனம் ஓட்டினால் ரூ.500,பர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5,000, நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் ரூ.1500, ஆட்டோ, கார், பஸ்களில் ஓட்டுனருக்கு இடைஞ்சலாக உட்கார்ந்து செல்லும் பயணி ரூ.1,500 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் இந்த விதிமுறை நேற்று முதலே அமலுக்கு வந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.