கோயம்பேட்டின் கொடை – இன்று 91: செங்கல்பட்டில் விர்ரென உயர்ந்த கொரோனா தொற்று…

Must read

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதனால் பாதிப்பு மொத்த எண்ணிக்கை  358ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலோனோர் கோயம்பேடு மார்க்கெட்டில் வணிகம் செய்தவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக திகழ்ந்ததைத் தொடர்ந்து, மூடப்பட்டது. அங்கிருந்து வெளியேறிய வணிகர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், அங்கு கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்தே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பரவி வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 224ஆக இருந்து வந்தது. இன்று ஒரே நாளில் புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  358ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பரங்கிமலை 44 , கூடுவாஞ்சேரி 23, கேளம்பாக்கம்-6, அச்சிறுப்பாக்கம் -4, செங்கல்பட்டு -3 பேர் உட்பட 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் செங்கல்பட்டு 3வது இடத்தில் இருந்து வருகிறது.

More articles

Latest article