நெட்டிசன்:

ஜான் துரை ஆசீர்வாதம்  ( John Durai Asir Chelliah) அவர்களின் முகநூல் பதிவு:
சுஜாதாவின் எழுத்துக்களை  கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா..?
.
அவற்றில் எப்போதும் ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும்..!
எங்கிருந்து வந்திருக்கும் சுஜாதாவுக்கு இந்த தேடல்..?
.gene ..!
ஆம்… சுஜாதா அப்பாவின் ஜீன்…!
.
சுஜாதாவின் அப்பா சீனிவாச ராகவன் தீவிரமான வைணவர்…!
வைணவர்களின் புனித நூல் “நாலாயிர திவ்யப் பிரபந்தம்” .
.
வழக்கம் போல ஒருநாள் சுஜாதா , நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை , தன் அப்பாவுக்கு படித்துக் காட்டிக் கொண்டு இருந்தாராம்…

கேட்டுக் கொண்டே இருந்த சுஜாதாவின் தந்தைக்கு என்ன தோன்றியதோ….
திடீர் என்று சுஜாதாவை அழைத்து இப்படி சொன்னாராம் :
“ டேய் ரங்கராஜா … குர்ஆன் படிக்கலாம்…
அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா”
.
அப்பா இப்படி சொன்னதும் ஆச்சரியப்பட்டுப் போன சுஜாதா ,
அடுத்த நொடியே புத்தகக் கடைக்குப் புறப்பட்டுப் போய் விட்டாராம்…!

“தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்”…

இந்தப் புத்தகத்தை வாங்கியும் வந்து விட்டார் சுஜாதா…

அப்புறம்..?

சொல்கிறார் சுஜாதா :

“சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

‘வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!’ என்று வியந்தோம்…”
.
வியப்பாகத்தான் இருக்கிறது…!

ஒரு தீவிர வைணவரான சுஜாதாவின் தந்தை , குரானைப் படிக்க ஆசைப்பட்டிருக்கிறார்…!
அதை தன் பிள்ளையும் படிக்க தூண்டி இருக்கிறார்..!

குரானைப் படித்த சுஜாதா சொல்கிறார் :
“திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை.
பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”

சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் – 2003)
.
# “எல்லா மதங்களும்
நல்லதைத்தான் சொல்கின்றன….
அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை…
அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான்
வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.”