சென்னை: கொல்லிமலை, ஜவ்வாது மலை சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்றும், சென்னையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் திட்டம் கொண்டு வரப்படும் என்று சுற்றுலாத்துறை மானிய கோரிக்கையில்  தெரவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று  (5-ம் தேதி)  போக்குவரத்து,  சுற்றுலா,  சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரூ.2.22 கோடியில் கொல்லிமலையை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.ரூ.2.91 கோடியில் ஜவ்வாது மலையில் சுற்றுலாவுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும்

சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற பயணத் திட்டம் தொடங்கப்படும். இந்தியாவின் முதல் மாநகராட்சியாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் கருதப்படும் சென்னையில் மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, வள்ளுவர் கோட்டம், போன்ற பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இங்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்காக, சென்னையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்னும் திட்டம் பொது – தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.150 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள்