2018ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் கோலமாவு கோகிலா.

ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து நல்ல வசூலும் ஈட்டியது.

நெல்சன் திலிப்குமார் இயக்கியிருந்த இந்தப் படம் தற்போது கன்னடத்தில் ரீமேக் ஆக உள்ளது.

ரேடியோ ஜாக்கியாக இருந்து இயக்குனராக அறிமுகமான இயக்குனர் மயூரா ராகவேந்திரா தான் இந்த படத்தை இயக்கவுள்ளார். பிரபல சீரியல் நடிகை ரச்சிதா ராம் தான் நயன்தாரா நடித்த ரோலில் நடிக்க உள்ளார்.