கொடி திரைப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Must read

kodi movie stills1
ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் திரிஷா நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படம் “கொடி”. இத்திரைப்படத்தின் முதல் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது, அந்த போஸ்டர் வெளியான முதல் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் டிவிட்டரில் ஆதிக்கம் செலுத்தியது. இத்திரைப்படம் தனுஷுக்கு 31வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் முதல் முறையாக சந்தோஷ் நாராயணனுடன் கை கோர்த்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று தனுஷ் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை அறிவித்தார், இத்திரைப்படத்தின் இசை வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் வெளியாகும் என்று கூறியுள்ளார். இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் எஸ் கேப் ஆர்டிஸ்ட் மதன் வெளியிடுகின்றார்.

More articles

Latest article