sivaji
இன்று சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அவரை பற்றி சில தகவல்கள் :-
சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன். இவருக்கு கிடைத்த விருதுகள் 1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. 1966 – பத்ம ஸ்ரீ விருது 1984 – பத்ம பூஷன் விருது, 1995 – செவாலியே விருது (Chevalier), 1997 – தாதா சாகேப் பால்கே விருது, 1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.
தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.
484e4f67-2362-4681-8b2f-e78b73a63c90
இன்று அவரின் பேரனும் இளைய திலகம் பிரபுவின் மகனும் ஆகிய விக்ரம் பிரபு இன்று தனது தாத்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திரு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் கூறியது இன்று அக்டோபர்-1 ஆம் தேதி நடிகர்களுடைய தினம் என விக்ரம் பிரபு கூறினார்.