கொடநாடு கொலை, கொள்ளை: சசிகலாவிடம் விசாரணை

Must read

கோவை:

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை கொள்ளை குறித்து வி.கே. சசிகலாவிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவுக்குள் கடந்த 24-ந் தேதி அதிகாலை புகுந்த  11 பேர் கொண்ட கும்பல்,  அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அடித்து கொலை செய்ததது. மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூரை தாக்கி வீழ்த்தியது. பிறகு பங்களாவுக்குள் நுழைந்த கும்பல், அங்கு ஜெயலலிதா, சசிகலா அறைகளில் இருந்த  ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்,   இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.  காவல்துறையினரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். அவரது கூட்டாளி சயன் விபத்தில் சிக்கி கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள குட்டி என்கிற ஜிஜினை தேடி தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டிருக்கிறார்கள்.

கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சயனிடம் நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பா நேற்று மூன்று 3 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார். அப்போது கொள்ளை தொடர்பாக சயன், பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவை வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.

தற்போது வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். ஆனால், பங்களாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் எவை என்பது இன்னும் தெரியாத நிலையே நீடிக்கிறது.

இதுவரை ஜெயலலிதாவின் அறையில் இருந்ததாக ஐந்சு  கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன காண்டரிமிருக சிலை ஆகியவற்றையும், கொள்ளையர்கள் பயன்படுத்திய 2 கார்கள், 6 ஜோடி கையுறைகள், ஆயுதங்கள் மற்றும் செல்போன்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

 

பங்களாவுக்குள் என் னென்ன பொருட்கள் இருந்தன என்பது பற்றி  ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு மட்டுமே தெரியும். ஜெயலலிதா மறைந்து விட்ட நிலையில் இதுதொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்பட்டை போலீசார் திட்டமிட்டனர். இதையடுத்து  பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்டை போலீசார் இன்று அல்லது நாளை பெங்களூரு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

More articles

Latest article