ரெய்டில் சிக்கிய விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல் சுப்பிரமணியம் மர்ம மரணம்! 

Must read

சென்னை:

மைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவருமான நாமக்கல் அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் இன்று மர்மமாக மரணமடை்தார்..

ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது குறித்து புகார் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் நண்பரும் நாமக்கல் அரசு ஒப்பந்ததாரருமான சுப்பிரமணியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இவை விஜயபாஸ்கரின் வரவு செலவு குறித்தவை என்று அப்போது செய்திகள் கசிந்தன.

இந்த நிலையில் இன்று சுப்பிரமணியம் திடீரென மர்மமான முறையில் அவரது தோட்டத்து பங்களாவில் இறந்து கிடந்தார். முதலில் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக  தகவல் வெளியானது. பிறகு அவர்  மாரடைப்பால்தான்  இறந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சுப்பிரமணியம் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More articles

Latest article