மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த கொடூர சிறுவர்கள் கும்பல் கைது!

Must read

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரம், யாதவ வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மனைவி வீரலட்சுமி (வயது 63). இவர் கடந்தமாதம் 25ந்தேதி ஜெபக்கூட்டத்துக்கு சென்றவர்  வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரலட்சுமியை அவரது செல்போன் எண்ணை வைத்து தேடி வந்தனர்.

வீரலட்சுமி

அதில், நெல்லை மாவட்டம் ஆவரை குளம் பகுதியில் இறுதியாக இருந்தது தெரியவந்தது. அதையடுத்து ஆவரை குளம் சென்ற போலீசார்  சந்தேகத்தின் பேரில் சில வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது வீரலட்சுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டு ஆரல்வாய்மொழி கண்ணுப்பொத்தை காட்டுப்பகுதியில் வீசப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கண்ணுப்பொத்தை என்ற காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்.  அங்கு வீரலட்சுமியின் பிணம் நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர கொலை மற்றும் கற்பழிப்பில் இரண்டு சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருந்த தகவல் வெளியாகி உள்ளது.

சம்பவத்தன்று வீரலட்சுமி ஜெபக்கூட்டம் முடிந்து திரும்பியபோது கடத்தப்பட்டுள்ளார். அவரை மூதாட்டி என்று பாராமல் காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். பின்னர் உயிரோடு விட்டால், தங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்று எண்ணி,  தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டனர்.

போலீசாரின் அதிரடி விசாரணையின்போது இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்  2 பேருக்கு 17 வயதுதான்.

இந்த கற்பழிப்பு, கொலை சம்பவத்தில் இவர்களுக்குமுக்கியப் பங்கு இருப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது, இதுபோன்ற பல சம்பவங்கள் இதற்கு முன் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த கும்பலிடம் யாராவது பெண் சிக்சி விட்டால், அவர்களை கண்ணுப் பொத்தை காட்டுப்பகுதிக்கு கொண்டு வந்து கும்பலாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து விடுவார்களாம்.

இவர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் வீரலட்சுமி உள்பட மொத்தம் 5 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மற்ற நான்கு பேரின் உடல்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

வேறு யாரையும் இவர்கள் பலாத்காரம் செய்துள்ளனரா, வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

ஏற்கனவே டில்லியில் நிர்பயா என்ற கல்லூரி மாணவி கும்பலால் கற்பழிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அவரை கற்பழித்தவரில் 17 வயது சிறுவனும் ஒருவன்.

அதேபோல் தற்போது கன்னியாகுமாரி மாவட்டத்தில் நடைபெற்றி ருக்கும் மூதாட்டி கற்பழிப்பு கொலை வழக்கில் சிக்கியுள்ள இருவர் 17 வயதேயானவர்கள் என்பதும், சமூகத்தின் சீரழிவு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை தயவுதாட்சண்ம் இல்லாமல் சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்…

More articles

Latest article