சென்னை:

ராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னை வேளச்சேரி மற்றும் சென்னை செங்கல்பட்டு மார்க்கம் உள்பட  38 புறநகர் மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே வரும் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையில் தண்டவாளப் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், இந்த தடத்தில் இரு மார்க்கத்திலும் மொத்தம் 38 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு காலை 9.50 வட்டபாதையில் இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் காலை 8.25, மேல்மருவத்தூர் – விழுப்புரம் காலை 11.30, விழுப்புரம் – மேல்மருவத்தூர் மதியம் 1.55, மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை மாலை 3.30, விழுப்புரம் – தாம்பரம் அதிகாலை 5.20, தாம்பரம் – விழுப்புரம் மாலை 6.10 மணி ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே வரும் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையில் தண்டவாளப் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், இந்த தடத்தில் இரு மார்க்கத்திலும் மொத்தம் 38 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு காலை 10.15, 11, மதியம் 12, 12.30, 1.15, 1.45, 2.15 மாலை 3.40, 4.10, 4.50, 5.20, 5.40, 6.10, 6.30, 6.50, இரவு 7.40, 8.10, 8.52 மணி மின்சார ரயில்களும், திருமால்பூர் ரயிலும் தாம்பரம் வரையில் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதேபோல், திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு காலை 11.30, மாலை 6.25 மணி ரயில்களும், செங்கல்பட்டு – சென்னை கடற்கரைக்கு காலை 11.50, மதியம் 12.15, 1, 1.50, 2.25, மாலை 3.15, 3.40, 4.35, 5, 5.30 6.05, 6.25, 6.40இரவு 7.25, 7.45, 8.50, 9.10, 10.15, 11.10 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்களும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டு – திருமால்பூருக்கு மதியம் 2.50, செங்கல்பட்டு – காஞ்சிபுரத்துக்கு இரவு 8.45 மணிக்கும், திருமால்பூர் – செங்கல்பட்டுக்கு காலை10.25, மாலை 5.10, இரவு 9 மணிக்கும் மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.