சுக்கு.
(Zingiber Officinale).

அலோபதி மருத்துவம்

Nutrients Amount
Basic Components
Proteins 1.8 g
Water 78.9 g
Ash 0.8 g
Phytosterols 15 mg
Calories
Total Calories 80
Calories From Carbohydrates 68
Calories From Fats 6.3
Calories From Proteins 5.1

Carbohydrates
Total Carbohydrates 18 g
Dietary Fiber 2 g
Sugar 1.7 g

Fats & Fatty Acids
Total Fat 750 mg
Saturated Fat 203 mg
Monounsaturated Fat 154 mg
Polyunsaturated Fat 154 mg
Omega-3 Fatty Acids 34 mg
Omega-6 Fatty Acids 120 mg
Vitamins
Vitamin C 5 mg
Vitamin E 260 mcg
Vitamin K 0.1 mcg
Thiamin 25 mcg
Riboflavin 34 mcg
Niacin 750 mcg
Vitamin B6 160 mcg
Folate 11 mcg
Pantothenic Acid 203 mcg
Choline 28.8 mg
Minerals
Calcium 16 mg
Iron 600 mcg
Magnesium 43 mg
Phosphorus 34 mg
Potassium 415 mg
Sodium 13 mg
Zinc 340 mcg
Copper 226 mcg
Manganese 229 mcg
Selenium 0.7 mcg


சுக்கில் உள்ள  ஒமேகா 3 செல்லின் வளர்சிதை மாற்றத்தினை ஒழுங்குப்படுத்துகிறது. அலோபதியில் துை  ஆன்டாக்சினெட்ஸ்(antioxidant) என்று சொல்வார்கள், சுக்கில் ஓமேகா 3 , ஒமேகா 6 போன்ற ஆன்டாக்சினெட்ஸ் உள்ளது

நோய் எதிர்ப்பு க்கு விட்டமின் சி யும், தோல் நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதுமட்டுமல்லாமல் குரோமியம், பாஸ்பரஸ், சிங்கு, செம்பு சத்து போன்ற தாதுக்கள் உடலுக்கு வலு சேர்க்கிறது மற்றும் ஆண்மை பெருக்கியாகவும் உதவுகிறது

பிற பயன்கள்

சுக்கில் உள்ள தாதுக்கள் நோய் தொற்று கிருமிகளை தடுத்து நோய் வராமல் பாதுகாக்கும் வல்லமை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ஜீரண கோளாறை சரி செய்து, குடல் இயக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது., பயணங்களில் வாந்தி ( மோசன் சிக்னஸ்) வராமல் தடுக்கிறது.

பெண்கள்

மகப்பேறால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்கிறது. கால்சியம் சத்து குறைவால் வரக்கூடிய மூட்டு வலி, தோல் வறட்சி, காயங்களால் வரக்கூடிய வீக்கத்தையும் குணப்படுத்துகிறது

உடல் எடை பராமரிப்புக்கும் உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக எடுத்து வந்தால் அல்சைமர் என்ற மறதி நோய், .உயர் சர்க்கரை, தேவையற்ற கொழுப்பு போன்வற்றை கட்டுப்படுத்துகிறது

சித்த மருத்துவம்

சூலைமந்த நெஞ்செரிப்பு தோஷமேப் பம்மழலை
மூல மிரைப்பிருமன் மூக்கு நீர்-வாலகப்
தோஷமதி சாரம் தொடர்வாத குன்ம நீர்த்
தோஷமா மம்போக்குஞ் சுக்கு.
வேறு.
வாதப் பிணிவயி றாதற் செவிவாய்
வலிதலை வலிகுலை வலியிரு விழி நீர்
சீதத் தொடுவரு பேதிப் பலரோ
சிகமலி முகமக முகவிடி கபமார்
சீதச் சுரம்விரி பேதச் சுரநோய்
தெறிபடு மெனமொழி குவர்புவி தனிலே
யீதுக் குதவும் தீதுக் குதவா
தெனும்விதி யிலைநவ சுறுகுண முனவே

– சித்தர் பாடல்

சுக்கின் குணம்

சித்த மருத்துவத்தில் சுக்கு ஒரு காயகல்ப மருந்தாக சித்தர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நம் அன்றாட பயன்பாட்டுக்கும் பயன்படுத்தலாம் . சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை என்ற வாக்கியத்தைக்கொண்டே நாம் சுக்கின் மகத்துவம் அறியலாம்

அக மருந்து

அரை தேக்கரண்டி சுக்கை தொடர்ந்து 48 நாட்கள் வெந்நீர் அல்லது மோர் உடன் மதியத்தில் உண்டு வந்தால் உடல் வலுபெறும், சுக்கிலம் பலப்படும் முக்கியமான ஆண்மை குறைவும் நீங்கும்

தீரும் நோய்கள்

அஜீரணம், நெஞ்சு எரிச்சல், புளி ஏப்பம், உடல் வெப்பம், ஆசன வாய் நோய், சுவாச நோய், பேதி , வாத குண்மம், சூலை வலி, வாத நோய்கள், கப சுரம், கிருமிகளினால் ஏற்படக்கூடிய சுரம் , செவி குத்தல்(காது வலி),  சளி குணமடையும், மேலும் தலைவலி, நீரேற்றம் , மன அழுத்தம் போன்ற நோய்கள் தீரும்

புற மருந்து

முடி உதிர்வை தடுக்கவும், முகப்பருவை நீக்கவும், முகப்பரு வராமல் தடுக்கவும் , சரும நோய்களில் இருந்து சித்த பாதுகாக்கவும் சுக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது.

மருத்துவர் பாலாஜி கனகசபை., MBBS, PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002