புதுடெல்லி:
ணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் ‛இந்தியா’ கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, காங்கிரஸ் தலைவர் கார்கே பேசுகையில், மணிப்பூர் நிலை குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். மணிப்பூர் வன்முறை குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவது பிரதமரின் கடமை என்றும், மணிப்பூர் விவகாரம் குறித்து, 140 கோடி மக்களின் தலைவர் பிரதமர் பார்லிமென்டிற்கு வெளியே பேசினால் போதாது. மக்களால் தேர்ந்தெடுக்க எம்.பிக்கள் அமரும் பார்லிமென்டில் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மணிப்பூரில் நிலைமை என்ன என்பது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜ்யசபா தலைவர் மற்றும் லோக்சபா சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறோம். 267 விதியின் கீழ் சபையில் விவாதம் நடத்த விரும்புகிறோம்.

ஆனால், மோடி அரசின் அமைச்சர், குறுகிய கால விவாதம் மட்டுமே நடக்கும் என, மற்றொருவர், அரை மணி நேரம் மட்டுமே விவாதம் நடக்கும் என்கிறார். 267 விதியின் கீழ் விவாதம் மணிக் கணக்கில் தொடரலாம். வாக்கெடுப்பும் நடக்கலாம். அதை நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார்.