திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல்  வழக்கில் சிக்கி உள்ள  கேரள மாநில முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர்,  அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் விவகாரத்தில் ரூ.1 கோடி லஞ்ச பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில்  அமலாக்கத்துறையினரால் நேற்று இரவு அதிரடியாக  கைது செய்யப்பட்டுள்ளார். சிவசங்கர் நான்காவது முறையாக மத்திய அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உ ள்ளது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேரள தங்கக்கடத்தல் வழக்கில், கேரள  முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவசங்கர்மீதும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதையடுத்து முக்கிய குற்றவாளயின ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தங்களுக்குள் சதி செய்து, பயங்கரவாத கும்பலை உருவாக்கி, நிதி திரட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தனர் என்று  என்ஐஏ  குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது சிவசங்கர் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.‘ இவர் கடந்த ஜனவரி 31ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.  இதையடுத்து அவர்மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன்  கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர் இன்று  எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று ED அதிகாரிகள் தெரிவித்தனர்.

லைஃப் மிஷன் என்ற ஊழல் வழக்கு:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன் கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான  ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவசங்கர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் பெற ரூ.4 கோடியே 48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக காண்ட்ராக்டர் சந்தோஷ் ஈப்பன் வாக்குமூலம் அளித்திருந்தார்.. மேலும், இந்த முறைகேட்டில், கேரள தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.  இதையடுத்து, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில்,  சிவசங்கர் ரூ.1 கோடி கமிஷனாக பெற்றதாக தகவல் வெளியானது.

இந்த வழக்கு தொடர்பாக,  சிவசங்கரின் ஆடிட்டர், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் சேர்ந்து வங்கியில் எடுத்திருந்த லாக்கரிலிருந்து ஒரு கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான், அது சிவசங்கர் ஊழல் மூலம் சம்பாதித்த பணம் என்று ஸ்வப்னா வாக்குமூலத்தில் தெரிவித்தார்.  அதாவது, லைஃப் மிஷன் ஊழல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், பிஎஸ்சரித், சந்தீப் நாயர், இந்த திட்டத்தின் ஒப்பந்ததாரர் சந்தோஷ் ஈப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

ஆனால் இதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று  சிவசங்கர் மறுத்துவந்ததுடன், தன்மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதாக கூறினார்.

ஆனால், அமலாக்கத்துறையினர்,  சிவசங்கருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக  கூறினர். இது தொடர்பாக கடந்த 3 நாட்களாக சிவசங்கரிடம்  விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை நேற்று இரவு அவரை கைது செய்துள்ளது.. நேற்றிரவு 11.45 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைதான சிவசங்கரை மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் அவரை இன்று எர்ணாகுளம் பிரின்ஸ்பல் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே தங்கக்கடத்தல் வழக்கு உள்பட பல வழக்குகளில் 3 முறை கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள சிவசங்கர் தற்போது வீடு கட்டும் ஒப்பந்த ஊழலில் 4வதுமுறையாக கைது செய்யப்பட்டு உள்ளார்.