2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும்: கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Must read

திருவனந்தபுரம்: கேரளாவில் 2021ம் ஆண்டு ஜனவரியில் தான் பள்ளிகளை திறக்க முடியும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இன்றுடன் முடிய இருந்த ஊரடங்கு சில தளர்வுகளுடன் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பல கட்டமாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டாலும்,  சில கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்தது. அதில் முக்கியமாக, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு தான் இருக்கும் என்று அறிவித்தது.

இந் நிலையில், கேரளாவில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்க போவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

மாநிலத்தில் தற்போது நிலவும் சூழலில் நடப்பாண்டில் பள்ளிகளை திறக்க முடியுமா என்பது சந்தேகமே என்று கூறி உள்ள அவர், எனவே ஜனவரி மாதம்  பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.

More articles

Latest article