கேரளா செங்கன்னூர் அருள்மிகு ஶ்ரீ மகாதேவர் கோயில்.

இந்த ஸ்தலம் கேரளாவில் ஆலப்புழா அருகில் செங்கன்னூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் 117கி.மி.  குமுளி 113 கி.மீ. கோட்டயம் 35 கி.மீ. சோட்டானிக்கரை 88 கி.மீ. பந்தளம்திட்டா 24 கி.மீ. ஏட்டுமானூர் 46 கிமீ.  தூரத்தில் உள்ளது. முக்கியமான இந்த ஊர்களிலிருந்து பேருந்து வசதி மற்றும் தனியார் வாகன வசதிகள் உள்ளது. மேலும் முக்கியமான கோயில்களான பகவதி அம்மன் கோயில் சிவன்  கோயில்களுக்குத் தரிசனம் காண விரும்புவோர் இந்த ஸ்தலத்துக்கும் சென்று தரிசனம் காணலாம். 

இறைவன் ஶ்ரீமகாதேவர்

இறைவி ஶ்ரீ பார்வதிதேவி 

திருத்தலத்தின்  அமைப்பு: 

தேவார வைப்பு தலமான இந்த கோயில் சிவன் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில், 1,500 ஆண்டுகளுக்கு முன்பு பழம்பெரும் பாரம்பரிய கட்டிடக்கலை மற்றும் சிற்பம் பெருந்தச்சனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் சிவ பெருமான் மகாதேவராக லிங்க வடிவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

சிவபெருமானின் சன்னிதிக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கியபடி உமையாள் பார்வதி தேவி அருள்பாலிக்கிறார். இவர்களோடு சாஸ்தா, நீலக்ரீவன் மற்றும் கணபதி ஆகியோரது சன்னிதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன.  கோயிற்சுவரை அண்டி “சுட்டம்பலம்” அரங்கும், கோயிற்பகுதியைச் சூழ “நாளம்பலமு”ம் அமைந்திருக்கின்றன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத – இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன. 

ஈசனுக்கு மூன்று, தேவிக்கு இரண்டு என்று அன்றாடம் ஐந்து சரப்பலிகள் (பூசைகள்) இடம் பெறுகின்றன. 

திருத்தலத்தின்  சிறப்பு: 

இங்கு வீற்றிருக்கும் பகவதியே கண்ணகியாக அவதரித்தாள். கண்ணகி விண்ணுலகுக்கு ஏகிய திருச்செங்குன்றம் இதுவே என்று சொல்லப்படுகின்றது. மானுடப்பெண்ணாக அவதரித்தவள் என்பதாலேயே இத்தேவிக்கும் மாதவிலக்கு ஏற்படுகின்றது. ஐம்பொன்னாலான தேவியின் விக்கிரகம், “பெருமாச்சுதன்” என்பவரால் இக்கோயிலுக்குக் கொணரப்பட்டது.கோவிலில் தினமும் ஐந்து பூஜைகள் செய்யப்படுகின்றன, சிவனுக்கு மூன்று சரபாலிகள் மற்றும் பகவதிக்கு மூன்று. தாந்திரன் வழிபாடு தாழாமனால் செய்யப்படுகிறது.

தெய்வத்தின் ஒழுங்கற்ற மாதவிடாயின் போது மூன்று நாட்களுக்குக் கோவில் மூடப்படும் போது,  திருப்புத்து எனப்படும் பகவதிக்கு அரிய மாதவிடாய் திருவிழாவைக் கோவில் கொண்டாடுகிறது. வெள்ளை ஆடையில் கறை தோன்றுவது பக்தியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கோவில் அதிகாரிகளின் கணக்குகளின்படி, நவீனக் காலங்களில், இந்த அம்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை காணப்படுகிறது, அதே நேரத்தில் பழைய காலத்தில் இது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டது. இந்த விழா பொதுவாகக் கேரளாவில் உயர் வகுப்பு பெண்களின் பருவ வயது விழாவை ஒத்திருக்கிறது.கோயில் மூன்று நாட்களில் மூடப்பட்டு, நான்காவது நாளில் சுத்திகரிப்பு விழா முடிந்த பிறகு திறக்கப்படுகிறது.

திருவிழா: 

திருப்பூத்ஆறாட்டு என்பது கோவிலில் வருடத்திற்கு மூன்று முறையாவது கொண்டாடப்படும் திருவிழா ஆகும். ஆறாட்டு  என்றழைக்கப்படும் புனித நீராடல் படங்களுக்கு வழங்கப்படுகிறது மற்றும் அலங்கரிக்கப்பட்ட படங்கள் மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 

ஊர்வலத்தின் போது பெண் பக்தர்கள் பாரம்பரிய தாலப்பொலி விளக்குகளை எடுத்துச் செல்கின்றனர்.

ஊர்வலத்துடன் கோவில் இசைக்குழு மற்றும் பஞ்சவாத்தியம் ஆகியவையும் உள்ளன. கோவிலின் முக்கிய திருவிழாக்கள் திருவாதிரை மாதமான தனு மற்றும் ஆறாது அன்று திருவாதிரை மாத மகரத்தின் போது கொடியேற்றம் ஆகும். வருடாந்திர திருவிழா டிசம்பர் -ஜனவரி மாதத்தில் 28 நாட்கள் கொண்டாடப்படுகிறது சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமியும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது..

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் இக்கோயிலுக்கு வந்து மகாதேவரையும், பார்வதி தேவியையும் மனமுருகி வேண்டினால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.