சாவித்திரியைத் தொடர்ந்து விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையிலும் கீர்த்தி சுரேஷ்….?

Must read

தமிழ்த் திரையுலகில் ‘பணமா பாசமா’ படத்தில் ‘இலந்த பழம்…. இலந்த பழம்’ பாடலின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் விஜய நிர்மலா. 2019-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி தனது 73-வது வயதில் மறைந்தார்.

தென்னிந்தியத் திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்துதளங்களிலும் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்று இவரது பெயர் 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது.

தற்போது இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு படமொன்று உருவாகவுள்ளது. இதனை அவரது மகன் நடிகர் நரேஷ் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இதில் விஜய நிர்மலாவாக நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியிருப்பதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article