ரசிகர் ஒருவரின் கார்ட்டூனால் கோபமடைந்த மாளவிகா மோகனன்….!

Must read

‘மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாளவிகா மோகன்.இவர் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். இவரது போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

‘மாஸ்டர்’ குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் ஒரு கார்ட்டூனை ட்விட்டர் பதிவில் வெளியிட்டார்.அதில் மாளவிகா மோகன் சமைப்பது போன்று வடிவமைத்திருந்தார்.

இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பதிவில், “ஒரு கற்பனையான (சினிமா கதாபாத்திரங்கள் இருக்கும்) வீட்டில் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் செய்வது தானா? எப்போது இது போன்ற பாலினப் பாகுபாடு சாகும்?” என்று குறிப்பிட்டார்.

உடனே ரசிகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனால், அதை ஸ்கிரீன் ஷாட்டாக வைத்துக் கொண்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More articles

Latest article