மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ்….!

Must read

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம். பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் ஆனால் தடைப்பட்டுக்கொண்டே வந்தது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளங்களை வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம் . அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவரும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி:

அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி
ஆதித்ய கரிகாலனாக விக்ரம்
சுந்தர சோழராக அமிதாப் பச்சன்
வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி
பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு
நந்தினியாக ஐஸ்வர்யா ராய்
குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

More articles

Latest article