பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்குவதே என் கனவு : ரசூல் பூக்குட்டி.

Must read

`ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் நாயகன் ரசூல் பூக்குட்டி இப்படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவுசெய்ய விரும்பும் சவுண்ட் டிசைனர் கேரக்டரில் நடிக்கிறார். அது அவரின் கனவும் கூட. இப்படத்தை ராஜிவ் பனகல் தயாரிக்க இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கியுள்ளார்.

பாலிவுட் உலகில் முன்னணி சவுண்ட் டிசைனரில் ஒருவர் இந்த ரசூல் பூக்குட்டி. இவர் `ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக ஆஸ்கர் விருதும் வாங்கியுள்ளார் . `கோச்சடையான்’, `நண்பன்’, `எந்திரன்’, `2.0′ உள்ளிட்ட படங்களில் சவுண்ட் டிசைனராக வேலை பார்த்தவர் இவர்.

இவரின் அடுத்த கனவு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாலிவுட்டில் ஒரு படம் இயக்குவதே என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article