சென்னை: கரூர் தவெக சம்பவத்தில் 41 பேர் பலியானது தொடர்பான சிபிஐ விசாரணைக்குதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
தவெக தலைவர் விஜயின் கரூர் மாவட்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கூட்ட நெரிசலுக்குகாரணம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி என தவெக தரப்பில் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, வரும் 17ந்தேதி (மார்ச்) திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்.27-ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. இறந்த குழந்தைகளுக்கு ஒரே இரவில் உடற்கூறாய்வு செய்ததும், ஒரே இரவில் தனி நீதிபதி விசாரணை கமிஷன் அமைத்தும், நள்ளிரவே முதல்வர் ஸ்டாலின் அங்கு ஓடோடி சென்று ஆறுதல் மற்றும் அஞ்சலி செலுத்தியதும், இதுவரை இல்லாத வகையில் விசித்திரமாக இருந்தது. இது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானது.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, முன்னதாக, தவெக தலைவர் விஜய் தவெக பொதுச் செயலர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலர் மதியழகன் ஆகியோர் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். இதனிடையே, கரூர் பலி தொடர்பான விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவரால் ஆஜராக இயலவில்லை என்றும், 10 நாள்களுக்குப் பிறகு வேறொரு தேதியில் தில்லிக்கு பதிலாக சென்னையில் ஆஜராக புதிதாக அழைப்பாணை அனுப்பினால் ஆஜராகி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க விரும்புவதாகவும் விஜய் சார்பில் சிபிஐக்கு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்து, அவர் செவ்வாய்க்கிழமை ஆஜராகாமல் இருக்க சிபிஐ விலக்கு அளித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் மார்ச் 17-ல் ஆஜராகிறார்.
இது தொடர்பாக செந்தில் பாஜாஜி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது!