சென்னை: ஏப்ரல் 29ந்தேதி கருஞ்சட்டை விருது வழங்கும் விழா அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, கவிஞர் கலி.பூங்குன்றனார், தோழர் எழில் இளங்கோவன், கொளத்தூர் சின்னராசு ஆகியோருக்கு ரூ.1லட்சம் பரிசுடன் கருஞ்சட்டை விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 29 அன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் திராவிட இயக்க வளர்ச்சிக்காக நீண்ட நாள்களாக செயல்பட்டு வரும் 3 மூத்த முன்னோடிகளுக்கு   “கருஞ்சட்டை விருதும்” ரூபாய் ஒரு லட்சம் நிதியும் வழங்கப்பட உள்ளது.

அதன்படி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனாருக்கும்,  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொருளாளரும், தலைசிறந்த பவுத்த அறிஞருமான தோழர் எழில் இளங்கோவனுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தில் வெளியில் தெரியாத வேர் போலத் தொடக்க நாள் தொட்டு தொண்டாற்றி வருபவரும் மூத்த தொண்டருமான  கொளத்தூர் சின்னராசுவுக்கும் வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவானது சென்னை ஜி.என்.ஷெட்டி சாலையில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெறுகிறது.  நிகழ்ச்சி செல்வின் சவுந்தரராஜன் தலைமையில், சிற்பி செல்வராசன் வரவேற்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து முனைவர் சு.பவிரபாண்டியன் விழா அறிமுக உரை நிகழ்து கிறார். விழாவை இரா.உமா தொகுத்து வழங்க இறுதியில் எட்வின் நன்றியுரை ஆற்றுகிறார்ர்.

விழாவில் கருஞ்சட்டை விருதுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குகிறார். விருதாளர்களுக்கான  ரூ.1லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் மா.சுப்பிர மணியன் வழங்கி பேசுகிறார்.

திராவிடர் கழக பிரசார செயலாளர் முனைவர் அருள்மொழி பாராட்டுரையும்,  சட்ட மன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு,  திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணா நிதி  ஆகியோர் பாராட்டுரையும் வழங்க உள்ளனர்.