சென்னை

டிசாவில் நட்ந்த ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதிய விபத்தில் 207  பேர் உயிரிழந்துள்ளனர்.   நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.   மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இன்று மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் 100 ஆம் பிறந்த நாள் ஆகும்.  இதையொட்டி தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருந்தது.  இந்நிலையில் நேற்று இரவு ஒடிசாவில்  இந்த பயங்கர ரயில் விபத்து நடந்துள்ளது.

எனவே கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.   கருணாநிதியின் நினைவிடம் மற்றும் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டுமே நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.