சென்னை

டிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ் பயணிகள் பாதுகாப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா முதல்வருடன் பேசி உள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இதில் சுமார் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.    இந்த இரு பயணிகள் ரயிலும் தமிழகம் வழியாகச் செல்வதால் இதில் ஏராளமான தமிழ்ப் பயணிகள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து தமிழ்க முதல்வர் முக ஸ்டாலின் தனது டிவிட்டரில்,

”ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை தொடர்புகொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தேன். அவர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டிருக்கிறேன். உடனடியாக ஹெல்ப் லைன் உருவாக்கி உதவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

எனப் பதிந்துள்ளார்.