ஒடிசா:
டிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடத்தில் இருந்து 120 இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். விபத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறிவது முக்கியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விபத்து ஏற்பட்ட பகுதியில் அஸ்வினி வைஷ்ணவ் சென்றுள்ளார்.