திமுக உறுப்பினராக கருணாநிதி புதுப்பிப்பு!

சென்னை,

திமுகவின் 15வது அமைப்பு தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, தானும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மீண்டும் தன்னை உறுப்பினராக  புதுப்பித்து கொண்டார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, மாவட்டம்தோறும் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, திமுகவினர் வீடுவீடாக சென்றும், முகாம் அமைத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

அதிமுக மட்டுமல்லாமல், பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுகவில் சேருகிறார்கள். திமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளார்.
English Summary
Karunanidhi renewed as DMK member