பொங்கலை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி

சென்னை,

நாளை தமிழர்கள் உலகம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டும் நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டு பொங்கல் நாளன்று திமுக தலைவர் கருணாநிதி, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு பொங்கப்படி கொடுப்பது வழக்கம். அப்போது ஒவ்வொருவருக்கும் ரூ.10 வழங்குவார்.

அந்த பணத்தை வாங்க திமுக தொண்டர்கள் அவரை நாடி கோபாலபுரம்  வருவது வழக்கம். அவர் தரும் பணத்தை பொக்கிஷமாக சேமித்து வைப்பார்கள்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் உடல்நலக்குறைவு காரணமாக சந்திக்கவில்லை.  இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தொண்டர்களை சந்திக்கிறார்.

இந்த ஆண்டு அவர்  தொண்டர்களுக்கு புதிய 50 ரூபாய் நோட்டு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தைத்திருநாளையொட்டி திமுக தலைவரின்  கோபாலபுரம் வீடு  அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

Tags: Karunanidhi meets the dmk volunteers tomorrow for Pongal, பொங்கலை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி